விருதுகள்

/விருதுகள்
 • ஆனந்தவிகடன், கல்கி, அமுதசுரபி போன்ற பத்திரிகைகளில் வெளியான பல சிறுகதைகள் இலக்கியச் சிந்தனை போன்ற வெவ்வேறு அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றுள்ளன.
 • இந்நூற்றாண்டின் மூன்று தலைமுறை நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் பாலங்கள் நாவல், கஸ்தூரி சீனிவாசன் விருதைப் பெற்றுள்ளது.
 • சிந்தனையைத் தூண்டும் சுயமுன்னேற்றக் கட்டுரைகளைக் கொண்ட சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? தொகுப்பு, மதிப்புமிக்க ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசைப் பெற்றுள்ளது.
 • கலப்புமணம் செய்த தம்பதியின் வாழ்வில் நிகழும் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் வேரில்லாத மரங்கள் நாவல், கல்கத்தா பாரதீய பாஷா பரிஷத் அமைப்பின் பரிசைப் பெற்றுள்ளது.
 • 1976-ல் சென்னை ஜேசீஸ் அமைப்பு, சிறந்த இளைஞர் விருதை வழங்கியது.
 • தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், சென்னை ரோட்டரி சங்கம் ஆகியவை, For the Sake of Honour விருதுகளை வழங்கியுள்ளன.
 • தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் ராஜீவ் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, அரிமா சங்கத்தின் மெல்வின் ஜோன்ஸ் விருது, சென்னை தெலுங்கு ஆர்ட்ஸ் அகாடமியின் விருது – ஆகியவையும் இவர் பெற்றுள்ள விருதுப்பட்டியலில் அடங்கும்.
 • அறிவைத் தூண்டும் எழுத்தாற்றலுக்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இவரைக் கௌரவித்துள்ளது.
 • ஃபெமீனா ஆங்கிலப் பத்திரிகை, 8.1997 சுதந்திரப் பொன்விழா சந்தர்ப்பத்தில், இந்தியாவை உருவாக்கிய ஐம்பது பெண்மணிகளுள் ஒருவர் என கௌரவித்தது.
 • அம்மா சொன்ன கதைகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான ஆறு கதைகளையும், அக்கதைகளைத் தன் குரலிலேயே வாசித்து ஓர் ஒலிநாடாவையும் இணைத்து இவர் வெளியிட்ட பேசும் புத்தகத்திற்கு, 1998-ன் சிறந்த சிறுவர் நூலுக்கான விருதை வழங்கியுள்ளது திருப்பூர் தமிழ்ச் சங்கம்.
 • திருச்சியின் அனைத்து மகளிர் சங்கங்களும் இணைந்து சிந்தனைச்செல்வி என்ற விருதை மார்ச் 1998-ல் வழங்கியுள்ளன.
 • பாரதீய வித்யா பவன் கேந்திரா மற்றும் டைரக்டர் கே.சுப்ரமணியம் நினைவு அறக்கட்டளை இணைந்து, ஸ்த்ரீ ரத்னா விருதை 8.3.1998 உலக மகளிர் தினத்தன்று வழங்கின.
 • பெங்களூர் அத்திமப்பே ஃபவுண்டேஷன் அமைப்பு, தேசிய அளவில் சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுத்து மனுஸ்ரீ விருதை 1998 ஏப்ரலில் வழங்கியது.
 • அமெரிக்க டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள ஓக்ரிட்ஜ் நகரின் மேயர், 1999 ஜூலையில் ஓக்ரிட்ஜ் நகரின் கௌரவப்பிரஜை விருது வழங்கி கௌரவித்துள்ளார். இவ்விருதினைப் பெரும் முதல் தமிழரும் தமிழ் எழுத்தாளருமாவார், சிவசங்கரி.
 • சர்வதேச மகளிர் சங்கத்தின் 1999-ம் ஆண்டின் சிறந்த பெண்மணி விருது, மார்ச் 2000-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
 • தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் சமுதாயப் பிரச்சினை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதற்காக, 1999-ம் ஆண்டிற்கான ROLL OF HONOUR விருதினை அக்டோபர் 2000-ல் வழங்கி கௌரவித்துள்ளது சென்னை மயிலாப்பூர் அகாடமி.
 • கல்கத்தா ராஷ்ட்ரிய இந்தி அகாடமி, பிரேம்சந்த் ராஷ்ட்ரிய சாகித்ய சம்மான் விருதை அக்டோபர் 2001-ல் வழங்கி கௌரவித்தது.
 • சென்னை வானவில் பண்பாட்டு மையம், டிசம்பர் 2002-ல் பாரதி விருது அளித்து கௌரவித்துள்ளது.
 • அகில இந்திய வானொலி நிலையம், இவரது வாழ்வைப் பற்றிய பேட்டியைத் தங்களது Archival Programme நிகழ்ச்சிக்காகப் பதிவு செய்துள்ளது, 2003 ஜனவரியில்.
 • தஞ்சை இன்னர்வீல் சங்கம், நாயகி 2005 விருது வழங்கி கௌரவித்தது, 2005 மார்ச்சில்.
 • நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இலக்கியப் பங்களிப்புக்காக நெய்வேலி புத்தக விழாவில் கௌரவித்தது 2005 ஜூலையில்.
 • ரோட்டரி சங்கம் சென்னை கீழ்ப்பாக்கம், வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவித்தது 2006 மார்ச்சில்.
 • மும்பை ஜீ டிவி, அர்ச்சனா அமைப்புடன் இணைந்து, 2006-ம் ஆண்டின் சிறந்த எழுத்தாளராக அங்கீகரித்து, அஸ்தித்வ விருதை வழங்கியது 2006 ஆகஸ்டில்.
 • நல்லி-திசை எட்டும் மொழிபெயர்ப்பு இலக்கிய விருது, நான் நானாக நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கு அளிக்கப்பட்டு, மூலஆசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது 2007 நவம்பரில்.
 • ஆந்திர மாநில யுவகலாவாஹினி இலக்கியக் கலைக் குழு, கோபிசந்த் இலக்கிய தேசிய விருது 2008 ஜனவரியில் வழங்கியது. இந்திய மொழிகள் அனைத்திற்குமான தேசிய விருதாக மாற்றப்பட்ட பிறகு, முதல் விருதைப் பெற்ற கௌரவம் சிவசங்கரிக்குக் கிடைத்தது.
 • சென்னை கம்பன் கழகத்தின் சார்பில், பேராசிரியர் கே. சுவாமிநாதன் நினைவு விருது வழங்கப்பட்டது, 2009 ஆகஸ்ட்டில்.
 • சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லூரி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது 2010 மார்ச்சில்.
 • மெகா டிவி, பெண் சாதனையாளர் விருது வழங்கியது, 2010 மார்ச்சில்.
 • பெங்களூர் இந்தியா டெவலெப்மெண்ட் ஃபவுண்டேஷன், தேச ஸ்னேஹி விருது வழங்கி கௌரவித்தது, 2012 டிசம்பரில்.
 • சென்னை பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு, பொற்றாமரை விருது வழங்கி கௌரவித்தது 2013 ஜூலையில்.
 • சென்னை விடியல் அறக்கட்டளை, 2015 மார்ச்சில் பாரதி விருது வழங்கியது.
 • கல்கி பத்திரிகையின் பவளவிழாவில், முத்திரை பதித்த மூத்த படைப்பாளர் என்று கல்கி குழுமத்தால் 2015 ஆகஸ்ட்டில் கௌரவிக்கப்பட்டார்.
 • கோவை பி.எஸ்.ஜி.ஆர். மகளிர் கல்லூரியில் 2016 ஃபிப்ரவரியில் நிகழ்ந்த தேசியக் கருத்தரங்கில், சிவசங்கரியின் இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு தொகுப்பிலுள்ள மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில் ஆய்வரங்கங்களை நிகழ்த்தி, கருத்தரங்கின் முக்கிய தகவல் வழங்கியவராக கௌரவித்தது.
 • உறவுச்சுரங்கம், பாரதீய வித்யா பவன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து, சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி என்ற தலைப்பில் 2015 ஜூன் முதல் 2016 மே மாதம் வரை ஓராண்டு முழுவதும், மாதம் ஒரு கூட்டம் என்ற வகையில் சிறப்புக் கூட்டங்களை நிகழ்த்தின. இவற்றில், சிவசங்கரியின் படைப்பு வகை ஒவ்வொன்றைப் பற்றியும் வெவ்வேறு இலக்கியவாதிகள் மாதந்தோறும் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றி கௌரவித்தனர்.
 • கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், சிறந்த படைப்பாளர் விருதை 2016 டிசம்பரில் வழங்கி கௌரவித்தது.
 • அன்பு பாலம் அமைப்பினரால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது, 2017 ஏப்ரலில்.
 • சென்னையிலுள்ள சங்கங்களுள் மிக மூத்த சங்கமாகக் கருதப்படும் ‘பாரதியார் சங்கம்’, பாரதியாரின் 96-வது நினைவு நாளான 11.9.2017 அன்று ‘பாரதியார் விருது’ வழங்கி கௌரவித்தது.
 • பத்மபூஷண் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில், குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் 10.12.2017 அன்று ‘படைப்பிலக்கிய விருது’ விருது வழங்கி கௌரவித்தது.
 • ‘தங்க தாரகை’ விருது நியூஸ் 7 சேனலினால் பிப்ரவரி 2018 ல் வழங்கப்பட்டது.
 • ‘தமிழ் நாட்டின் பெருமை’ ‘Pride of Tamil Nadu’ ரவுண்டு டேபிள் – இந்தியாவினால் மார்ச் 2018 ல் வழங்கப்பட்டது.
 • வாழ்நாள் சாதனையாளர் விருது டேக் கார்ப்பரேஷன் ஆகஸ்ட் 2019 – ல் வழங்கப்பட்டது.
 • அகில இந்தியா பாரதி விருது தமிழ்நாடு அரசினால் செப்டம்பர் 2019 ல் வழங்கப்பட்டது.
 • முன் உதாரண வாழும் வரலாறு விருது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸால்  2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
 • நவ சக்தி’ விருது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 2021 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

• • • •