திருமதிசிவசங்கரி
3-ஈ, பிளாக்-5, ராணி மெய்யம்மை டவர்ஸ்
சத்யதேவ் அவென்யூ
ராஜா அண்ணாமலைபுரம்
சென்னை – 600 028
தொலைபேசி – (044) 40808535
மின்னஞ்சல்-jibu_chandra@yahoo.co.in
jibuchandra@gmail.com
வலைதளம் – www.sivasankari.in
- எழுதவேண்டும் என்ற கனவோ, எழுத்தில் சாதனை புரியவேண்டும் என்ற வெறியோ இல்லாமல், எதேச்சையாக எழுதத் துவங்கியவர். ஆனாலும், எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, சிரத்தை, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர். எழுத்துப் பணிக்காகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, உண்மையான விவரங்களோடு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். எந்த எழுத்துமே ஆக்கபூர்வமாக இருக்கவேண்டுமேயன்றி, அழிவுப்பாதைக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர். மனித உணர்வுகள், மனித இயல்புகள், மனித உறவுகள், அன்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எழுதுவதற்குக் காரணம், இவை தனிமனித விழிப்புணர்வுக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமையும் என்பதால்தான்… இது சிவசங்கரியின் ஆணித்தரமான வாதம்.
எழுத்தாளராக…
- 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏறத்தாழ 50 குறுநாவல்கள், 36 நாவல்கள், 16 பயணக்கட்டுரைத் தொடர்கள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 2 வாழ்க்கைச் சரிதங்கள், 5 மொழிபெயர்ப்பு நூல்கள், பிற தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, பதினெட்டு இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பேட்டிகளையும் கதை கட்டுரை கவிதைகளையும் உள்ளடக்கிய நான்கு மாபெரும் தொகுப்புகள் – ஆகியவை வெளியாகியுள்ளன.
- கண்தானம் குறித்த கட்டுரை, வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, இறந்தபின் தங்கள் கண்களை தானம் செய்வதாகப் பலரையும் உறுதிகொள்ள வைத்தது.
- மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், திருநங்கைகள் – எனப் பலவகை மனிதர்களைப் பற்றிய இவரது பல கட்டுரைகள், சமுதாய விழிப்புணர்வைத் தூண்டிவிட்டிருக்கின்றன.
- மறைந்த பிரதமர்கள் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி, அன்னை தெரஸா போன்ற பல பிரமுகர்களைப் பேட்டிகண்டு இவர் எழுதிய கட்டுரைகள், வாசகர்களால் வரவேற்கப்பட்டன.
- ஏழு நாவல்கள் தமிழில், கன்னடத்தில் ஒன்று, தெலுங்கில் ஒன்று – திரைப்பட வடிவம் பெற்றுள்ளன.
- போதைமருந்துப் பழக்கம், மதுவுக்கு அடிமையாதல், முதியோர் இல்லம் ஆகியவற்றைப் பற்றிய நாவல்களும், வேறு பல கதைகளும் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்துள்ளன. இவற்றுள் சுபா இந்தித் தொடர், ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் என்று அமோக வரவேற்பைக் கண்டது. ஒரு மனிதனின் கதை தமிழ்த் தொடர், இருமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
- பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன் இருமுறை சோகம் (CHOGM) வெளிநாட்டுப் பயணங்களில் உடன் சென்ற ஒரே பெண் எழுத்தாளர் என்ற பெருமை உண்டு. இப்பயணக்கதைகள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ஜப்பானில் முதல் மொழிபெயர்ப்புப் பயணக்கதையாக 1995 மே மாதத்தில் வெளியானது.
- மலேஷியத் தமிழ் தினசரி ஒன்றின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருமுறை மலேஷியா சென்றுவந்துள்ள முதல் தமிழ் எழுத்தாளர்.
- 1986 செப்டம்பரிலிருந்து நான்கு மாதங்கள் அமெரிக்காவிலுள்ள அயோவா (IOWA) நகரில் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பங்கெடுத்திருக்கிறார்.
- அவன் நாவல், உக்ரேனிய மற்றும் ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனின் கதை, பாலங்கள், இனி, பொய், இதர பல நாவல்கள் ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
- மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவின் நியமன உறுப்பினராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
- அக்னி (AGNI – Awakened Group for National Integration) – என்ற பெயரில், தனிமனித விழிப்புணர்வின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகோலுவதில் நம்பிக்கையுள்ள அமைப்பின் நிறுவனர்.
- அடையாறு தரமணியிலுள்ள வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில், போதை மருந்து மற்றும் மதுஅடிமைகளுக்கு சிகிச்சையளிக்கும் ராஜாஜி புனர்வாழ்வு மையம் என்ற சிகிச்சைப்பிரிவு, இந்தியன் வங்கியின் பொருளுதவியுடன் துவங்கப்படப் பெரிதும் காரணமாக இருந்தவர்.
- நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் இவர் நடத்திய கருத்தரங்குகள், பின்னர் சிங்கப்பூர் மற்றும் இதர உள்நாட்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.
- ஒரு பெண்ணின் கதை என்ற இவரது நெடுந்தொடர், சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. தொடர்ந்து பல நெடுந்தொடர்கள், இவரது கதைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற பணியில் பதினாறு ஆண்டுகள் ஈடுபட்டு, 18 இந்திய மொழிகளைச் சார்ந்த முக்கிய எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேட்டியெடுத்துள்ளார். பேட்டிகளுடன் அந்த எழுத்தாளர்களது படைப்புக்களும், அந்தந்த மாநிலப் பயணக்கதைகளும், ஒவ்வொரு மொழியின் இலக்கியப் பின்னணி குறித்தான விரிவான கட்டுரைகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் தென்னிந்திய மொழித் தொகுப்பு 1998 ஜனவரியில், இரண்டாவது கிழக்கிந்திய மொழித் தொகுப்பு 2000 செப்டம்பரில், மூன்றாவது மேற்கிந்திய மொழித் தொகுப்பு 2004 மே மாதத்தில், கடைசி நான்காவது வடக்கிந்திய மொழித் தொகுப்பு 2009 ஜூன் மாதத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டன.
கல்வி நிறுவனங்களின் அங்கீகாரங்கள் - சிவசங்கரியின் எழுத்துக்கள் என்ற தலைப்பில் ஐந்து பல்கலைக்கழங்களின் எட்டு பேராசிரியர்கள் கலந்துகொண்ட இரண்டு நாள் கருத்தரங்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
- இதுவரை ஏறத்தாழ எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்கள் எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்டி படிப்புக்காக இவரது கதைகளை ஆய்வு செய்துள்ளனர்.
- வாழ்க்கைக்குறிப்பு
- 1942-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.
- பெற்றோர் – திரு. சூரியநாராயணன், திருமதி ராஜலட்சுமி.
- உடன்பிறந்தோர் – இரு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி.
- 1963-ம் ஆண்டு, கணவர் திரு. சந்திரசேகரனை மணமுடித்தார். இரு வேறு பொறியியல் துறைகளில் இரு வேறு பட்டங்களைப் பெற்று, உயர்பதவி வகித்தவர் திரு. சந்திரசேகரன்.
- கல்வி மற்றும் கலாச்சாரப் பின்னணி
- கல்லூரியில் முதல் இடத்தையும், பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது இடத்தையும் பெற்ற விலங்கியல் பட்டதாரி.
- பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று, முன்னூறுக்கும் மேற்பட்ட முறைகள் அரங்கேறியவர்
- தென்னிந்திய கர்னாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர்.
• • • • •